திண்டிவனத்தைச் சேர்ந்தவர் களிடம் தனியார் நிதி நிறுவனம் ரூ. 8. 74 லட்சம் மோசடி செய் துள்ளதாக எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், அம்பிகா, கலியபெருமாள், விஜயலட்சுமி, பிரபு,ஜெயராமன், ராஜாமணி ஆகியோர் தனித்தனியே நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில்புகார் அளித்தனர். புகார் மனுவில் கூறியிருப்பது:
திண்டிவனம், மரக்காணம் சாலை பரமானந்தா நகரில் வசிப்பவர் அர்ஜூணன். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் நிதி நிறுவனத்தை சக்திவேல் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனம் நம்பகதன்மைவாய்ந்தது என கூறியுள்ளார். அந்த நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் முதலீடுசெய்தால் ரூ. 18 லட்சம் மதிப்பிலான வீட்டு மனையோ அல்லது ரூ. 18 லட்சத்தை மாதம் தலா ரூ. 1.80 லட்சம் வீதம் 10 மாதங்களில் கிடைக்கும் என கூறி எங்களை சேர்த்தார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நாங்கள் ஒவ்வொருவரும் ரூ. 10 லட்சத்தை சக்திவேலிடம் கொடுத்தோம். அதன் பின் மாத தவணைகளில் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை கொடுத்தனர். மீதி தொகை கொடுக்கவில்லை . எங்கள் அனைவருக்கும் இன்னமும் நாங்கள் கொடுத்த பணத்தில் ரூ. 8.74 லட்சம் கொடுக்கவில்லை. அர்ஜூணன், சக்திவேல் ஆகிய இருவரும் பணம் மோசடி செய்துள்ளனர். எனவே இருவரிடமிருந்து மீதி தொகையை பெற்று தருமாறும், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
திண்டிவனம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.திண்டிவனம் அருகே கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார்.புகாரில் கூறியிருப்பது:
வருவாய்த துறையில் கிராம நிர்வாக உதவியாளர் பணியை என் மகனுக்கு வாங்கி தருவதாக எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் ரூ. 3 லட்சத்தை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெற்றார். தற்போது வேலை வாங்கி தராததால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது திட்டி ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நான் அளித்த தொகை ரூ. 3 லட்சத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்வதாக அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago