‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெற்ற மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேல்மலையனூரில் 517 பயனாளிகளுக்கு ரூ67,63,457 மதிப்பிலான நலத்திட்ட உதவி களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து, திண்டிவனம் அருகே நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்ததையடுத்து அவரு டைய இறப்பு நிவாரணம் மற்றும் பணி நிலுவைத் தொகை ரூ.1,0015,222க்கான காசோலையை சௌந்தரராஜன் மனைவியிடம் அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
பின்னர் பேசிய அமைச்சர், “முதல்வராக ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன், பல வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கிராமப்புற மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடையும் வகையில், ‘உங்கள்தொகுதியில் முதல்வர்’ திட்டத்தினை தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன”என்றார்.
இந்நிகழ்வில் ஆட்சியர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், தனித்துணை ஆட்சியர் பெருமாள், மேல்மலையனூர் வட்டாட்சியர் நெகருன்னிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago