ராஜபாளையம் தர்மா காம்ப்ளக்ஸ் மற்றும் அம்பாசமுத்திரம் பழைய பஸ் நிலையம் எதிரில் கிரீன் சீ அக்ரோ டெக் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இங்கு பணம் கட்டினால் இரு மடங்கு பணம் தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி பலர் பணம் கட்டினர். ஆனால், நிறுவனம் பணத்தை தரவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பலர் போலீஸில் புகார் செய்தனர். இந்த மோசடி தொடர்பாக இந்நிறுவனத்தை நடத்திய ராஜபாளையம் ஆசிலாபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (46), லோகநாதன், சங்கரநாராயணன், மணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர். இந்நிலையில், இந்நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவ ணங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என்று காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, சார்பு ஆய் வாளர் அண்ணாதுரை ஆகியோர் தெரிவித் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago