திருநெல்வேலியில் 4 மையங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு நேற்று நடைபெற்றது.
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவ, மாணவிகளுக்கும், தனித்தேர்வர்களுக்கும் துணை தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இத்தேர்வு நேற்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தேர்வை எழுதுவதற்கு 193 பேர் விண்ணப்பித்திருந்தனர். திருநெல்வேலி சாப்டர் மேல் நிலைப்பள்ளி, கைதிகளுக்காக பாளையங்கோட்டை மத்திய சிறை, பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்கள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இத் தேர்வு மையங் களில் நேற்று மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 45 பேர் தேர்வு எழுத வரவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago