ஒண்டி வீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க - வெளியூர் நபர்களுக்கு அனுமதி இல்லை :

By செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 250-வது நினைவு நாள் வரும் 20-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் ஒண்டி வீரன் நினைவிடம் உள்ளது. அவரது நினைவு நாளில் இங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், ஒண்டி வீரன் நினைவு நாளில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியர் ஹஸ்ரத்பேகம் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் டிஎஸ்பி ஜாஹீர் உசேன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திருநாவுக்கரச, பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், “பச்சேரி கிராம மக்கள் 20 பேர் மட்டுமே ஒண்டி வீரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் முடிக்க வேண்டும். முளைப்பாரி, பால் அபிஷேகம் போன்ற எதுவும் செய்யாமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

நினைவு நாளில் பங்கேற்க உள்ள நபர்களின் பட்டியலை முன்கூட்டியே வருவாய் மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட 20 நபர்களும் கூட்டமாகச் செல்லாமல் தனிமனித இடைவெளியை கடைபிடித்துச் சென்று மரியாதை செலுத்தி விட்டு உடனே திரும்ப வேண்டும். வெளியூர் நபர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்