வேலூர் சிறைகளில் சோதனை :

By செய்திப்பிரிவு

வேலூர் ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கல் தொடர்பாக 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் சுமார் 900 பேர், பெண்கள் தனிச்சிறையில் சுமார் 110 பேர் என விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தடை செய்யப்பட்ட கஞ்சா, பான் மசாலா, பீடி, சிகரெட் மற்றும் ஆயுதங்கள் ஏதாவது பதுக்கி வைத் துள்ளார்களா? என திடீர் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பரிந்துரையின் அடிப்படையில் சிறைக்குள் நேற்று காலை 6 மணியள வில் திடீர் சோதனை தொடங்கியது.

வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சுமார் 80 பேர் கொண்ட காவலர்கள் இரண்டு குழு வினராக பிரிந்து காலை 8 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.

சிறைக்குள் இருந்த தொகுதிகளின் அறைகளில் இருந்து சிறைவாசிகள் வெளியேற்றப்பட்டு, கழிவறை, சமையல் கூடங்கள், பொருட்கள் வைப்பறை சந்தேகத்துக்குரிய இடங்கள் என சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்