குருப்-1 முதல்நிலைத் தேர்வு - தமிழ்வழியில் படித்தவர்கள் சான்றிதழை பதிவேற்றலாம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

குருப்-1 முதல்நிலைத் தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு கோரியுள்ள விண்ணப்ப தாரர்கள், தாங்கள் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குருப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜன.3-ம் தேதிநடத்தப்பட்டது. அத்தேர்வெழுதியவர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில், தமிழ்வழியில் பயின்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் தமிழ்வழியில் படித்த சான்றிதழ் பெறுவதற்கான படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்த படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய படிவத்தில் உள்ள தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100கேபி முதல் 200 கேபி அளவில் ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல்விவரங்களுக்கு தேர்வாணையத்தின் 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்