கடலூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸார் கிராமங்களில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கடலூர் எஸ்பி சக்திகணேசன் வழிக்காட்டலின் படி டிஎஸ்பி (சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு) அசோகன் ஆலோசனைப்படி சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர்கள் லூய்ஸ்ராஜ், பரமேஸ்வரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அன்பழகன்,ஷேக்நாஸர், தலைமைக் காவலர் தீபா கிறிஸ்டின் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்கும் வகையில் கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன்படி கோண்டூர், தோட்டப்பட்டு, சேமக்கோட்டை, எஸ்.ஏரிப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், கோணாங்குறிஞ்சி, காடாம்புலியூர், புலவனூர்,வி. ஆண்டிக்குப்பம், அங்குசெட்டிப்பாளையம், சன்யாசிபேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று கண்காணித்து, விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமை நிகழா மலிருக்க கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இக்கிராமங்களில் மயான வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூடம், நூலக வசதி குறித்தும் போலீஸார் கேட்டறிந்தனர்.
கிராம பொதுமக்கள் தந்த தகவலின் அடிப்படையில் இக்குழுவினர் அறிக்கை தயார் செய்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago