கடலூர் மாவட்டத்தில் குறுவை நெல் கொள்முதல் செய்ய 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கடலூர் மாவட்டஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் டெல்டா பகுதிகளில் 16 ஆயிரத்து 250 ஹெக்டரும், டெல்டா அல்லாத பிற வட்டங்களில் 18 ஆயிரத்து 750 ஹெக்டரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்டா அல்லாத வட்டங்களில் அறுவடை தொடங்கி உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2021-22 நெல் கொள்முதல் பருவத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது கடலூர் வட்டத்தில் நடுவீரப்பட்டு, பட்டீஸ்வரம், சி.என்.பாளையம் ஆகிய 3 கிராமங்களிலும்,புவனகிரி வட்டத்தில் பூவாலை, கொளக்குடி ஆகிய 2 கிராமங்களிலும், விருத்தாசலம்வட்டத்தில் வயலூர், சத்தியவாடி,ராஜேந்திரப்பட்டினம், கொடுமனூர், இருப்புக் குறிச்சி, கம்மாபுரம், தொரவளுர், கோ.மங்கலம் ஆகிய 8 கிராமங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.
இதேபோல் முஷ்ணம் வட்டத்தில் வெங்கிடசமுத்திரம், எசனூர், கள்ளிப்பாடி, மேலப்பாளையூர், கார்மாங்குடி, சி.கீரனூர், காவனூர், தொழுர், நெடுஞ்சேரி, குணமங்கலம், முஷ்ணம், அம்புஜ வள்ளிபேட்டை, கானூர், எம்.பி.அக்ராகார, பேரூர் மற்றும்வேப்பூர் வட்டத்தில் சேதுவராயன்குப்பம், சிறுவரப்பூர், பனையஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தர விடப்பட்டுள்ளது.
நடப்பு கொள்முதல் பருவத் திற்கு மத்திய அரசு சன்ன ரகத்திற்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,888-உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.70-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.1,958 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இதே போன்று மத்திய அரசு சாதாரண ரகத்திற்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,868 உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.50-ஐ சேர்த்து மொத்தம் ரூ.1,918 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னுரிமை அடிப் படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் தினம் அன்று மட்டுமே வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago