விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் சிறு,குறு விவ சாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 4,950 ஹெக்டேர் நிலத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.23.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஏக்கர் வரை உள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 75 சதவீதம் மானியத்திலும் பாசனக்கருவிகள் வழங்கப் படும். இதற்காக அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ்கள் பெறுவதற்கு வேளாண் - உழவர் நலத் துறை, வருவாய் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இதையடுத்து கம்பு பயிரிடுவதில் மகசூல் சாகுபடி மேற் கொண்ட விவசாயிக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங் கினார்.
பயிர் சாகுபடியில் சிறப்பான உற்பத்தியினை மேற்கொண்ட உழவர் உற்பத்தி குழுவிற்கு ரூ.10,000 நிதியுதவியை ஆட்சியர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago