திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மாம்பழச் சாலை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனை மையங்கள் ஏற்படுத்தப் பட்டு அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சார்பில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரோனா தொடர்பான அரசின் விதிமுறைகளை கடை பிடிக்காதவர்கள் மீது நடவடிக் கையும் எடுக்கப்படுகிறது.
இதன்படி நேற்று முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 800 பேர், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் ஆகியோரி டமிருந்து ரூ 4.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago