கரோனா பரவல் தொடங்கியதில் இருந்து மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரளாவில் இருந்து புளியரை சோதனைச்சாவடியைக் கடந்து வருவோர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர் களுக்கு உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்படுகிறது.
புளியரை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன சோதனைப் பணிகளை தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார். எஸ்பி கூறும்போது, “கேரளாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. அங்கிருந்து வருவோர் கரோனா பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். போலிச் சான்றிதழ்கள் மூலம் நுழைய முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago