ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் - காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நேற்று நடைபெற்றது.

இக்கோயிலில் அம்பாளுக் கென்று பெரிய விழாவாக ஆடிப்பூர வளைகாப்பு மற்றும் ஐப்பசி திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறும். இவ்வாண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 1-ம் தேதி நெல்லையப்பர் கோயிலில் உள்ள காந்திமதி அம்பாள் சந்நிதிமுன் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் சுவாமி க்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றுவருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான காந்திமதி அம்பா ளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

சுவாமி, அம்பாளுக்கு காலை யில் சிறப்பு அபிஷேகமும், தீபாராத னையும் நடைபெற்றது .இதைத் தொடர்ந்து அம்பாள் சந்நிதிமுன் காந்திமதி அம்பாளு க்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழா நிகழ்ச்சிகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றன. கடந்த 1-ம் தேதி முதல் வரும் 9-ம் தேதி வரை நெல்லைப்பர் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்