அம்பையில் இளைஞர் கொலை: தந்தை கைது :

By செய்திப்பிரிவு

அம்பாசமுத்திரம் அருகே மகனை கொலை செய்த வழக்கில் 4 மாதமாக தலைமறைவாக இருந்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாசமுத்திரம் கன்னிவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் வினோத் (26), கடந்த 20.03.2021-ம் தேதி இரவில் வீட்டின் மாடிப்படியில் மயங்கிக் கிடந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 23.03.2021-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

அம்பாசமுத்திரம் போலீஸார் நடத்திய விசாரணையில் வினோத், அவரது தந்தை வெள்ளத்துரை, தம்பி கார்த்திக் (23) ஆகிய மூவரும், 20-ம் தேதி வீட்டில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதும், மது போதையில் தகராறு ஏற்பட்டு வினோத்தை அவரது தம்பி மற்றும் தந்தை கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், வெள்ளத்துரை (58) தலைமறைவானார். போலீஸார் அவரை தேடிவந்தனர். 4 மாதங்களுக்குப்பின் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்