வேலூர் அருங்காட்சியகத்தில் - தபால் தலைகள் வைக்க ஏற்பாடு :

வேலூர் அருங்காட்சியத்தில் அரிய வகை நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக விரைவில் வைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் அருங் காட்சிய காப்பாட்சியர் சரவணன் கூறும்போது, ‘‘தமிழக அருங் காட்சியகங்களில் இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாத அரிய வகை பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வைக்க வேண்டும் என அருங் காட்சியகங்களின் இயக்குநர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், வேலூர் கோட்டையில் உள்ள அருங் காட்சியகத்தில் ஒரு லட்சம் புள்ளிகளால் வரையப்பட்ட பிரபல கர்நாடக இசைப்பாடகி பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஓவியம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த ஓவியம் சுற்று லாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ராஜேஸ்வரி என்பவர் தனது பேனா மூலம் ஒரு லட்சம் புள்ளிகளால் வரைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஓவியம் வரும் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வை யிட வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வரும் மாதங்களில் இதுவரை அருங் காட்சியகத்தில் வைக்கப்படாத அரிய வகை நாணயங்கள், தபால் தலைகள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்