கடந்த 1-ம் தேதி முதல் வரும் 7-ம் தேதி வரை கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான நேற்று விழுப்புரம் நகராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் ஒவ்வொரு வார்டுக்கு ஒரு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவினர் 42 வார்டுக ளிலும் உள்ள தெருக்கள், வீடுகள்,வணிகப் பகுதிகளுக்கு நேரில் சென்று கரோனா தடுப்பூசி போடப்படாமல் உள்ள விடுபட்ட நபர்களை கண்டறிந்து, உரிய விவரங்களை பெற்று தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கினர். இதனை ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்ட விவரத்தை உறுதி செய்வதுடன், கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி போட்ட விவரங்களையும் இக்குழுவினர் சேகரிப்பார்கள்.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத் திக்கொண்டவர்கள் விவரங்கள் சேகரிப்பட்டு, வார்டு குழு பொறுப்பாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
துப்புரவு ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளை கண்காணித்து அதற்கான அறிக்கை படிவத்தில் உரிய கள விவரத்தை பூர்த்தி செய்து நாள்தோறும் மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத்தலைவர் மருத்துவர் செல்வராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
42 வார்டுகளிலும் தடுப்பூசி போடப்படாமல் உள்ள விடுபட்ட நபர்களை கண்டறிவர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago