ரங்கம் அம்மா மண்டபம் காவிரிக் கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி பாஜகவினர் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடிப் பெருக்கு நாளில் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தவும், நீர்நிலைகளில் நீராடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்தநிலையில், அம்மா மண்டபம் காவிரிக் கரையில் ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்த பக்தர்களை அனுமதிக்க வேண்டும். காவிரித் தாய்க்கு நம்பெருமாள் சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை வழக்கமான முறைப்படி அம்மா மண்டபம் படித்துறையில் நடத்த அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மா மண்டபம் முன் சாலையில் அமர்ந்து பாஜகவினர் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், விவசாய அணி மாநில துணைத் தலைவர் கோவிந்தன், மண்டலத் தலைவர்கள் ரங்கம் ஷாலினி, மார்க்கெட் சதீஷ், மலைக்கோட்டை மகேந்திரன், பாலக்கரை ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago