கனிமவளங்கள் கடத்தலை தடுக்க - காவல்கிணறு, அஞ்சுகிராமத்தில்லாரிகளை தீவிர ஆய்வு செய்ய முடிவு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.விஷ்ணு தலைமை யில் நடைபெற்றது.

மாவட்ட எஸ்பி மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கனிமங்கள் முறைகேடாக வெட்டியெடுத்தல் மற்றும் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்:

ஒவ்வொரு வட்டாட்சியரும் வட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டத்தை மாதம் இருமுறை கூட்டி, கனிமம் மற்றும் சுரங்கம் தொடர்பான புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தி லிருந்து, அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அஞ்சுகிராமம் மற்றும் காவல்கிணறு சோதனைச் சாவடி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இந்த சோதனைச்சாவடிகளின் வழியாக வாகனங்கள் செல்லும்போது வாகனத்தில் உள்ள கனிமத்தின் வகை, அளவு, நடைச்சீட்டின் அனுமதி காலம் போன்றவற்றை சரிபார்த்து, அதனை மீண்டும் மறு முறை உபயோகிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோதமாக கனிமங் களைத் தோண்டி எடுத்தல், கொண்டு செல்லுதல், இருப்பு வைத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் தங்கள் பகுதியில், யாராவது சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பதை அறிந்தால், உடனடி யாக வருவாய் வட்டாட்சியர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் மற்றும் காவல் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

வாகன தணிக்கையின் போது உரிய நடைச்சீட்டு இல்லாமல் கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனம் கைப்பற்றப்பட்டு, ஓட்டுநர் மற்றும் வாகன உரிமை யாளர் மீது சட்டத்தின்படி நடவடி க்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்