புகையிலை பொருட்களைத் தடுக்க வட்டாரம் வாரியாக கண்காணிப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், `குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அறவே இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்’ என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதன்படி, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

குட்கா, பான்மசாலா ஆகியவற்றை ஒழிப்பதை தீவிரப்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி வாயில்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். புகையிலை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம், என்று தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்