பெண் காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் பெண் காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை. சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,437 ஆண்களுக்கும், 2,622 பெண்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. பாளையங்கோட்டையிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு , உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற்றன. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மைதானத்தில் பெண்களுக்கான முதற்கட்ட தேர்வு நடைபெற்றது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்வில் 1,320 பெண்கள் தேர்வாகி இருந்தனர். அவர்களில் 488 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் நீளம்தாண்டுதல், 100 மற்றும் 200 மீட்டர் ஒட்டம், குண்டு எறிதல் மற்றும் கிரிக்கெட் பந்து எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டு உடல் திறன் மதிப்பிடப்பட்டது. அப்பகுதியில் 300 -க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்