கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடன் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்ற கடன் அசல் தொகையை தவணை முறையில் செலுத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூட்டுறவு பயனீட்டாளர் சங்க மாநில செயலாளர் பேசினார்.

குமாரபாளையத்தில் கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்க மாநிலச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்துப் பேசியதாவது:

நெசவாளர்கள், விவசாயிகள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்ற கடனுக்காக ஜப்தி, ஏலம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். ரூ.2 லட்சம் கடனுக்கு வட்டி, அபராத வட்டி, கூட்டு வட்டி என ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கணக்கு காட்டி வருகிறார்கள். வாங்கிய கடனில் அசல் தொகையை நீண்ட கால தவணையாக செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இது பற்றி தமிழக முதல்வர், வீட்டு வசதி துறை அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

முன்னதாக சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் லோகநாதன், சேலம் மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்