கரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழுப்புரம், கடலூரில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
கடலூர் தனியார் திருமண மண்டபத் தில் கரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் கைகளை சோப்பினால் சுத்தம்செய்யும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. எஸ்பி சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செந்தில்குமார்,தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் காரல்,வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள், மருத்துவர்கள், பயிற்சி செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நேற்று ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷணப்ரியா, வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ், துணை ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவல்துறை சார்பில் விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் பாண்டியன் முன்னிலையில். விழுப்புரம் எஸ்பி நாதா தலைமையில், மாவட்ட தொற்றாநோய் பிரிவு மருத்துவர் விஷ்ணுகுமரன் கரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கை கழுவுதல் எப்படி என்று செய்துகாண்பித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago