சங்கராபுரம் அருகே கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் :

By செய்திப்பிரிவு

சங்கராபுரம் அருகே மலைப்பகுதி புறம்போக்கில் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை வருவாய்த் துறையினர் நேற்று அகற்றியதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் வடக்கு ஒன்றியம் பொருவளூர் மற்றும் சவேரியார் பாளையம் கிராம சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினரால் பொரூவளூர் கிராமத்தில் புறம்போக்கு இடத்தில் ஆலயம் எழுப்பி, அதில் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மலைப் பகுதியில் புறம்போக்கில் ஆலயம் எழுப்பியிருப்பதாக காவல்துறையினர் அளித்தப் புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் தலைமையிலான வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் ஆலயத்தை அகற்ற முயன்றனர். அப்போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருப்பினும் வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்