அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கிகளில் பொருத்தி எறி குண்டுகளை சுட பயன்படுத்தப்படும் அண்டர் பேரல் கிரனேடு லாஞ்சர் (UBGL) எனப்படும் லாஞ்சர் கருவியை கருவியை திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை வடிவமைத்துள்ளது.
இந்த புதிய கருவியை ஜூலை 30-ம் தேதி திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகம் செய்தார்.
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் வடிவமைப்பில் 40X46 எம்.எம். அளவில் இந்த யூபிஜிஎல் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் மாநில காவல் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கியிலும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளிலும் இணைத்து இந்த கருவியைப் பயன்படுத்தலாம். இது ஏறத்தாழ 400 மீட்டர் தொலைவுக்கு உள்ள இலக்கை அதிக திறன் கொண்ட வெடிபொருட்களைக் கொண்டு தாக்கவல்லது. இதன் எடை 1.6 கிலோவாகும்.
இந்த யூபிஜிஎல் கருவியின் மூலம் எதிரியின் இலக்குகளில் ஒரே ஒரு எறி குண்டு மூலம் அதிக சேதத்தை ஏற்படுத்த முடியும். ராணுவ வீரர்கள் எதிரிகளின் இலக்கை நோக்கி முன்னேறும்போது, துப்பாக்கியில் உள்ள குண்டுகளையும், எறி குண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். இந்த யூபிஜிஎல் கருவியை எளிதாக ஒரு நிமிடத்தில் துப்பாக்கியுடன் இணைக்க முடியும். இந்த கருவி போர்கள், பயங்கரவாதிகளின் மீதான தாக்குதல்கள், சிறப்புப் படைகள், சட்ட அமலாக்கப் பிரிவுகள், நக்ஸல் தடுப்பு மற்றும் காடுகளில் நடைபெறும் போர் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ.கே.சிங், இணை பொது மேலாளர்கள் வி.குணசேகரன், எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago