திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகரில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், அரசு உத்தரவை மீறி நடந்து கொள்பவர்களைத் தடுக்க சிறப்பு சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சார்பில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதன்படி, முகக்கவசம் அணியாமல் வந்த 911 வாகன ஓட்டிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81 பேர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
படித்துறைகள் மூடல்
கரோனா பரவலைத் தடுப்பதற்காக ரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை, ஓடத்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு) ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளன. ஆடிப் பெருக்கு விழாவையொட்டி இந்த இடங்களில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இங்கு வர வேண்டாம். கரோனா 3-ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago