விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை வரை கோயில் களில் தரிசனத்திற்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்துவரும் வேளை யில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர், மயிலம் சுப்பிர மணிய சாமி கோயில், பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில், அவலூர்பேட்டை சித்தகீரிஸ்வரர் முருகன் கோயில், கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு நாளை ( ஆகஸ்ட் 3) வரை சாமி தரிசனம் செய்வதற்கும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்கள், சித்தலூர் அங்கா ளம்மன் கோயில், கீழையூர் வீரட் டேசுவரர்கோயில், கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜப் பெருமாள்கோயில், பரிக்கல் லட்சுமிநரசிம்மசாமி கோயில், ஆதித்திருவரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோயில் மற்றும் திருக்கோவிலூர் உலகளந்தப்பெருமாள் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு நாளை வரை நீர்நிலைப் பகுதிகள், ஆற் றங்கரை ஓரங்களில் மற்றும் கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கும் நீராடுவதற்கும் முற்றிலும் தடைசெய் யப்பட்டுள்ளது.
மேலும் ஆகமவிதிப்படி சாமிஅலங்காரங்கள் மற்றும் பூஜைஅர்ச்சகர்கள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடை பெறும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago