நெற் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் :

குறிஞ்சிப்பாடி பகுதியில் நெற்பயி ரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி வடக்கு மற் றும் தெற்கு, ராசாக்குப்பம், கல் குணம், பூலாம்பாடி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவ சாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

பயிர் 45 நாட்கள் ஆன நிலையில் சுமார் 500 ஏக்கரில் நெற் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. மஞ்சள் நோய் தாக்குதலா அல்லது வேறு ஏதாவது நோய் தாக்கியுள்ளதா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப் பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் கூறியது: குறிஞ்சிப்பாடி பகுதியில் நெற் பயிர் மஞ்சள் நிறமாக உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் வேளாண் விஞ்ஞானிகளை அழைத்து வந்து வயல்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு சரியான ஆலோசனை வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்படு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்