விருதுநகரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஓர் அரிய பொருள் சிறப்புக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசைக் கருவியான "துந்தினா" இசைக் கருவி காட்சிப்படுத்தப்பட்டது.
"துந்தினா" மிகத் தொன்மையான இசைக் கருவியாகும். இது மேற்கிந்திய நாட்டுப்புற இசையில் பயன்படுத்தப்படும் நரம்பு இசைக்கருவியாகும். மூங்கில் மற்றும் மரம், உலோகம் காகிதத்தால் செய்யப்பட்டது. இதற்கு "ஏக்தரா" என்ற பெயரும் உண்டு. மகாராஷ்டிரா மாநிலத்தின் கூத்துக் கலையான தமாஷா எனப்படும் கலையில் துந்தினா பிரதான கருவியாக இசைக்கப்படுவது குறிப்பிட்டத்தக்கது.இக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். இம்மாதம் முழுவதும் இச்சிறப்பு கண்காட்சி நடைபெறும் என அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago