திருச்சியில் 18 கிலோ பழைய கோழி இறைச்சி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

உணவுப் பாதுகாப்பு அலுவலர் கள் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் நேற்று ஆய்வு நடத்தினர்.

22 கடைகளில் ஆய்வு செய்ததில், ஒரு கடையில் 18 கிலோ பழைய கோழி இறைச்சி இருப்பதைக் கண்டறிந்து, பறிமுதல் செய்து, அழித்தனர். மேலும், அந்தக் கடைக்கு உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி பிரிவு 55, பிரிவு 63 ஆகியவற்றின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.2,000 அபரா தம் விதிக்கப்பட்டது.

“பழைய அல்லது கெட்டுப்போன இறைச்சிகளை விற்பது குற்றமாகும். திருச்சி மாவட்டத்தில் கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்தாலோ அல்லது ஆய்வின்போது கண்ட றியப்பட்டாலோ உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் இதுபோன்று ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்” என்று உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் பாபு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்