தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் தொடக்க உரையாற்றினார். வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசினார்.
கூட்டத்தில், நடப்பு மக்களவைக் கூட்டத் தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வுள்ளது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையொட்டி, மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆக.10-ம் தேதி நாடு முழுவதும் மின் வாரிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத் துள்ளன. வேலைநிறுத்தத்தை தமிழ்நாட்டில் முழுமையாக வெற்றி யடையச் செய்ய வேண்டும். மின் வாரியத்தைச் சீரமைப்பது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மின் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலியை வாரியமே நேரிடையாக வழங்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், வி.இளங்கோ, டி.பழனிவேல், பொருளாளர் எம்.வெங்கடேசன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago