தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வாசகர் திருவிழா தென்காசியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி கிளை செயலாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ரமேஷ், தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
கரோனா பேரிடர் காலத்துக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கான உளவியல் சிக்கல்களுக்கு தீர்வு காண மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி தலைமையில் விவாதம் நடத்தி, புதிய அணுகுமுறையுடன் கற்றல், கற்பித்தல் உத்திகளை மேற்கொள்ள ஆலோசனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, தென்காசி நூலகர் பிரம்மநாயகம், செல்வின் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இணையவழியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்கேற்ற குழந்தைகளுக்கு மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜன் பரிசளித்தார்.
ஓம் பிரணவா ஆசிரமம் சார்பில் காவல் ஆய்வாளர் மாரிசெல்வி, தன்னார்வலர் கார்த்திக் ஆகியோர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago