சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு உலக பசுமை இயக்கத்துடன் இணைந்து திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடப் போட்டி நடத்துகிறது. இதில் 3, 4, 5-ம் வகுப்பு பயிலும் திருநெல்வேலி மாவட்ட மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம். ‘எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர்’ என்ற தலைப்பில் போட்டி நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரர் போல் உடை அணிந்து அவர்கள் பற்றிய வசனங்களை மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் பேசி வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
வீடியோவின் தொடக்கத்தில் தங்களின் பெயர், வகுப்பு மற்றும் பள்ளியின் பெயரை கட்டாயம் சொல்ல வேண்டும். வரும் 7-ம் தேதிக்குள் 9444973246 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மூன்று சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago