கடலூர் செவித்திறன் - பார்வை திறன் குறைபாடு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது, இதுகுறித்து பள்ளித் தலைமையாரிசிரியர் மரியபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் 2012-22ம் புதிய கல்வி ஆண்டிற்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. அங்கு 5 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
இப்பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, சீருடை, இருப்பிடம் அனைத்தும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. கல்வி ஊக்க தொகை, பஸ் பாஸ், ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை ஆகியவை பெற்றுத் தரப்படும்.
இது போல பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2021-22 புதிய கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு 5 வயது முதல் 12 வரை வயதுள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, உணவு, இருப்பிடம் அனைத்தும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 04142 210635,70101 68587,94875 55948 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago