நெல்லையில் 8 மையங்களில் நீதிமன்றப் பணியாளர் தேர்வு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை எப்எக்ஸ் பொறியியல் கல்லூரி, பேட்டை ராணி அண்ணா கல்லூரி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, தூய யோவான் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி, சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி ஆகிய8 மையங்களில் நீதிமன்ற பணியாளர் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,575 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர்.

திருவண்ணாமலை உள்ளிட்டவெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் திருநெல்வேலியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர்கள்கூறும்போது, உள்ளூரிலுள்ள தேர்வு மையத்தை தேர்வு செய்திருந்தும், தொலைதூரத்திலுள்ள வெளிமாவட்ட மையங்களை ஒதுக்கீடு செய்ததால் பல்வேறு சிரமங்களை சந்தித்து இங்கு வந்துள்ளோம். சொந்த மாவட்டங்களிலோ அல்லது அருகிலுள்ள மாவட்டங்களிலோ தேர்வுமையங்களை ஒதுக்க வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே தேர்வுமையங்களுக்குள் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்