திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப், திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்டு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செய்யது முகமது, பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை பார்வயற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன், காது கேளாதோர் பள்ளி முதல்வர் ஜான்சன், பிஷப் சார்ஜென்ட் பள்ளி தாளாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago