கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் கீழ்கண்ட அறியுறுத்தல்களை வழங்கினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக, சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை 19 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 3,162 கிராம ஊராட்சி வார்டுகள் வாரியாக தொடர்புபடுத்தும் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

இதே போல் 9 ஊராட்சி ஒன்றியங்களில் விரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யும் பணிகளை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து முடித்திடவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், வாக்காளர்கள் பட்டி யல்கள் தயாரித்தல் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்துமுடித்திட வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களை தேர்வு செய்து வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

ஆய்வுக் கூட்டத்தில் திட்ட இயக்குநர் ரா.மணி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர்.சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்சு.குமாரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெ.மஞ்சுளா, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்