இளையான்குடி அருகே சொந்த சமூகத்தினரால் - ஊராட்சி தலைவர் குடும்பம் புறக்கணிப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

இளையான்குடி அருகே தங்களது குடும்பத்தை புறக்கணித்து திருவிழா நடத்த இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் புகார் அளித் துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகே கச்சாத்தநல் லூரில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெருமாள் ஊராட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பெருமாள் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் ஊரில் ஆக்கிரமிப்பில் இருந்த 4 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க நட வடிக்கை எடுத்தேன். இதனால் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தையும் எனக்கு ஆதரவாக இருக்கும் 12 குடும்பங்களையும் சமூகப் புறக் கணிப்பு செய்துள்ளனர்.

எங்களை சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. அதேபோல் எங்களது குடும்ப நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங் கேற்பதில்லை.

அடுத்த வாரம் கோயில் விழா நடக்க உள்ளது. அந்த விழாவுக்கு எங்களிடம் வரி வசூலிக்கவில்லை. இதுகுறித்து வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தோம். அவரது தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனிடையே, கரோனா காலத்தில் கோயில் திருவிழா நடத்தக் கூடாது என வட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவையும் மீறி கோயில் விழாவை நடத்த முயற்சித்து வரு கின்றனர். சமூகப் புறக்கணிப்பு செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்திடம் கேட் டபோது, கோயில் விழா நடத்த தடை விதித்துள்ளோம். ஊராட்சித் தலைவர் குடும்பத்தை சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து ஜூலை 31-ல் (இன்று) கோட்டாட்சியர் தலைமையில் சிவகங்கையில் சமாதானக் கூட்டம் நடக்கிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்