ரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி வழங்கக் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

ராமானுஜ தரிசன சபை நிர்வாகிகள் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் அலுவலகத் தில் நேற்று அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் வைணவ அடியார்கள், பக்தர்கள் ஆகியோருக்கு தீர்த்தம், சடாரி பிரசாதங்கள் அளிக்கப்படுகின்றன.

108 வைணவ திவ்ய தேசத் தலங்களில் முதன்மையான தலம் என்ற பெருமை வாய்ந்த ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீர்த்தம், சடாரி வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பது ராமானுஜர் ஏற்படுத்திய வைணவ நெறிமுறை கள் மற்றும் நீண்டகால பழக்க வழக்கங்களுக்கு விரோதமாக உள்ளன.

இந்த செயல் உலகெங்கி லும் உள்ள வைணவ அடியார் களுக்கும், பக்தர்களுக்கும் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.

வைணவ கோயில்களில் பூஜைகள் முடிந்த பிறகு தீர்த் தத்தை முதலில் அர்ச்சகர்கள், கைங்கர்யகாரர்கள் எடுத்துக் கொண்டால் மட்டுமே பூஜைகள் பூர்த்தியாகும் என ஆகம விதிகள் கூறுகின்றன. இந்த வழி முறைகள் ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குட்பட்ட அனைத்து சன்னதிகளிலும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன.

எனவே, இந்த நடைமுறையை மீண்டும் ஏற்படுத்தி, பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி பிரசாதங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்