களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அப்துல் அஜிஸ் மனைவி நாகூர் மீராள் (55). இவர், வீட்டு முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வீடு, கடையை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு வெளியே சென்றிருந்தார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். பூட்டியிருந்த வீட்டுக்குள் எப்படி வந்தாய் என்று அப்பெண்ணிடம் கேட்டபோது, தான் போலீஸ்என்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் சோதனையிடுவதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்துக்குப்பின் அப்பெண் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்று விட்டார். நாகூர்மீராள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் டப்பாவுக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago