6 இளைஞர்கள் கோவை மத்திய சிறையில் அடைப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில்பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட 6 இளைஞர்கள், குண்டர்சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தி. பாலமுருகன் (26), ச. முத்துக்குமரன் (23), அ. ராஜசேகரன் (27), ரா. விக்ரம் (27), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த த. பிரவீன்ராஜ் (28), ரா. அழகர் (19) ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார், உதவி ஆணையர் எம். நாகசங்கர் உள்ளிட்டோர் பரிந்துரையின்பேரில் மாநகர காவல் ஆணையர் செந்தாமரைகண்ணன் உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் 6 பேரும் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்