முதுகுளத்தூர், சாயல்குடியில் இருந்து - புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம் : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

முதுகுளத்தூர், சாயல்குடியில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசு பேருந் துகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகு ளத்தூர் மற்றும் சாயல்குடி பேருந்து நிலையங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அரசுப் பேருந்து புதிய வழித்தடங்களை தொடங்கி வைத்தார்.

மேலும் பல்வேறு அரசு நலத் திட்டங்களின் கீழ் 51 பயனாளிகளுக்கு ரூ.19.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, கமுதி வட்டம் வௌ்ளாங்குளம் கிராமத்தில் புதிய மின் மாற்றியை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தும், கமுதி நகரில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கு இடம் தெரிவு செய்வதற்காகவும் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவீரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜ்மோகன், பொது மேலாளர் ராகவன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் பேசியதாவது, கடந்த 10 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை ரூ. 33,000 கோடி நஷ்டத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதனை சீர் செய்து போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திகழும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்