திருநெல்வேலி மாநகரில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட முதன்மை செயல் அலுவலர் நாராயணன் நாயர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
திருநெல்வேலி மாநகரில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத் திட்டத்துக்கென்று முதன்மை செயல் அலுவலராக நாராயணன் நாயர் நியமிக்கப்பட்டிருந்தார். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணியின்போது அங்கிருந்து தோண்டப்பட்ட ஆற்று மணலை விற்றது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார். இந்நிலையில் நாராயணன் நாயர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago