கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடக்கம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சியின் மையப் பகுதியாக கிரீன் சர்க்கிள் உள்ளது. இங்கு, அதிகம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், ஜி.ஆர்.டி ஓட்டல் அருகில் சாலை விரிவாக்கம் செய்யவும், கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பதுடன் இணைப்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கால்வாய் களின் உயரத்தை குறைத்து சாலையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அதே போல், சத்துவாச்சாரியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, நெடுஞ் சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பூங்காவின் அளவு குறைக் கப்படும். மேலும், இணைப்புச் சாலையின் நடுவில் கால்வாயை சற்று தள்ளி கட்டவும் 6 மீட்டர் இணைப்புச் சாலையை 8 மீட்டராக விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்