திண்டுக்கல் என்.ஜி.ஓ. கால னியை சேர்ந்தவர் தினேஷ். இவர், ஆன்லைனில் இரு சக்கர வாகனம் விற்பனைக்கு உள்ளதை கண்டு தொடர்புடைய எண்ணுக்குப் பேசினார். வாக னத்தை வாங்க முன்பணமாக ரூ.20 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அந்நபர் கூறினார்.
இதை நம்பிய தினேஷ் ரூ.20 ஆயிரத்தை அந்நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இதன் பின் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டி ருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, சென்னையைச் சேர்ந்த ஆனந்தபாபு (25) என் பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago