திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டு தல் குழுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சசிதீபா முன்னிலை வகித்தார்.
பான்மசாலா, குட்காவால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், 2 மாதங்களுக்குள் நிகோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலியை மாற்றவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் பேக்கரி நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ணாபுரம்வெங்கடாஜலபதி திருக்கோயில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள அங்கன்வாடி மையம், தச்சநல்லூர் மேல்கரை அங்கன்வாடி மையங்களுக்கும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago