தென்காசியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை : கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

அண்டை மாநிலமான கேரளாவில் கோழிக்கோடு பகுதிகளில் கோழிகள் இறப்பு காணப்பட்டதால் முன்னெச்சரிக் கையாக தென்காசி மாவட்டம் புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சோதனைச் சாவடி அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. மேலும், கோழி, கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனங்கள் கேரளாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

இறந்த கோழிகளை கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் இறக்கவில்லை என்றும், பாக்டீரியா நுண் கிருமிகளால் ஏற்பட்ட பாதிப்பால் கோழிகள் இறந்ததும் தெரியவந்தது. தென்காசி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை பயமின்றி எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்