கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை :

By செய்திப்பிரிவு

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் தள்ளி கட்டிட தொழி லாளி கொலை செய்யப்பட்டார்.

மூலைக்கரைப்பட்டி அருகே முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமர்(36). அதே பகுதியைச் சேர்ந்த சுடலை(41) என்பவருடன் கட்டிட பணிக்கு சென்றுவந்தார். அங்குள்ள பேச்சியம்மன் கோயில் அருகே கிணற்றுக்கு பக்கத்தில் நேற்றுமுன்தினம் இரவில் இவர்கள் இருவரும் மற்ற நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது ராமருக்கும், சுடலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ராமர் கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்டார். நாங்குநேரி தீயணைப்பு படையினர் அங்கு சென்று ராமரின் உடலை மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்