மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆலங்குளத்தில் அமைக்க கோரிக்கை :

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதியிடம் அளித்துள்ள மனு விவரம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல் நீதிமன்றம் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. ஆலங்குளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அமைக்கப்படவில்லை. மாவட்ட நீதிபதி குழு வருகை தந்து ஆலங்குளம் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து சென்றனர். அந்த இடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அடங்கிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு கழுநீர்குளம் ஊராட்சிக்கு சொந்தமான அரசு நிலத்தில் கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அளித்த மனுவில், ‘விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தென்காசியில் மின் பகிர்மான வட்டம், குற்றாலம், மத்தளம்பாறை, திரவிய நகரில் உப மின்நிலையம் அமைக்க வேண்டும்.

சுரண்டையில் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்