திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
திசையன்விளையில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமுள்ள காவல் நிலைய சாலை, பழைய பேருந்து நிலையம், மெயின் பஜார், உடன்குடி சாலை, இட்டமொழி- நவலடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago