புளியரை சோதனைச் சாவடியில் சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் பணியில் இருந்தபோது, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த காரை நிறுத்தி, காரில் இருந்தவர்கள் வைத்திருந்த கரோனா பரிசோதனை சான்றிதழை வாங்கி பார்த்தார். கரோனா நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருந்தனர். ஆனால், அது போலியானது எனத் தெரியவந்தது. புளியரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை நடத்தியதில், புளியரை பகவதிபுரத்தைச் சேர்ந்த சரவணமகேஸ் (37) என்பவர் கரோனா பரிசோதனை போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. போலி சான்றிதழ்கள் மூலம் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த இசக்கிமுத்து (29), ரமேஷ் (25), தெற்கு வீரவநல்லூரைச் சேர்ந்த முகேஷ் (22), திருச்சியைச் சேர்ந்த சந்தோஷ் (24) மற்றும் இவர்களுக்கு போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்த சரவணமகேஸ் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago